3வது டெஸ்ட் போட்டி வெளிச்சமின்மையால் நிறுத்தம்!

  அனிதா   | Last Modified : 19 Oct, 2019 03:36 pm
3rd-test-match-stops-due-to-lighting

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய அணி, பின்னர் ரோஹித் சர்மா, ரஹானே இணையின் ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது. இந்நிலையில் மேகமூட்டம், போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

அகர்வால் 10 ரன்களும், சதீஸ்வர் புஜரா பூஜ்ஜியமும், விராட் கோலி 12 ரன்களும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா 117, ரஹானே 83 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close