ரஹானே 100, ரோகித் 150

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2019 10:59 am
rahane-100-rohit-150

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே சதமும், ரோகித் சர்மா 150 ரன்களும் அடித்துள்ளனர்.

ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில்,  ரஹானே 169 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் தனது 11ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். ரோகித் சர்மா 199 பந்துகளில் 21 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் 167, ரஹானே 115 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close