2ஆம் நாள் ஆட்டமும் வெளிச்சமின்மையால் நிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2019 04:44 pm
day-2-was-also-halted-due-to-lack-of-light

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமில்லாததால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

ராஞ்சியில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இன்று நடைபெற்று வரும் 2ஆவது நாள் ஆட்டத்தில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. உமேஷ் யாதவ்  10 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து துவம்சம் செய்தார்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212, ரஹானே 115, ஜடேஜா 51 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லிண்டே 4, ரபாடா 3 விக்கெட்டுளை கைப்பற்றினார்கள். 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடிய தென்னாப்பிரிக்கா ஆட்டத்தின் முதல் ஓவரின் 2ஆவது பந்திலேயே விக்கெட்டை இழந்தது. ஷமி பந்துவீச்சில் எல்கர் ஆட்டமிழந்தார். இதன்பின் அடுத்த ஓவரிலேயே டி காக்கின் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். 

5 ஓவர்கள் முடிந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமில்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்திகொள்வதாக அறிவிக்கப்பட்டது.

போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close