தென்னாப்பிரிக்காவுக்கு ஃபாலோ ஆன்

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 02:22 pm
3rd-test-follow-on-to-south-africa

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ ஆன் வழங்கியது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்திருந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ ஆன் வழங்கியது.

இந்திய அணியை விட தென்னாப்பிரிக்கா அணி 335 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3, முகமது சமி, நதீம், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா 18 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close