இந்தியா ஹாட்ரிக் வெற்றி - தென்னாப்பிரிக்கா ஒயிட்வாஷ்

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 10:01 am
india-hat-trick-south-africa-whitewash

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. 

தென்னாப்பிரிக்கா - இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை குவித்த இந்திய அணி போட்டியை டிக்ளேர் செய்திருந்து. இதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களும், 2வது இன்னிங்சில் 133 ரன்களும் எடுத்து தோல்வியடைந்தது. இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close