முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2019 04:16 pm
first-test-match-india-win

வங்க தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குபிடிக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் அபாரமாக விளையாடி  6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை குவித்ததையடுத்து இந்திய டிக்ளேர் அறிவித்தது.

இதையடுத்து 3 ஆம் நாளான இன்று வங்கதேச அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேசம் இறுதியாக 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக விளையாடிய இந்திய அணி  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close