இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் பிங்க் பால் பயன்படுத்தப்படுவதால் போட்டி சவாலாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த போட்டி வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு முறையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த போட்டியில் பிங்க் நிற எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் பகலிரவு டெஸ் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது, இந்தியாவில் விளையாடவுள்ள இந்தப்போட்டி சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. இந்த போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளதால் வெகு விமர்சையாக போட்டிகள் தொடங்குவதற்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ள 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பிங்க் பால் பயன்பாடு சவாலானது என்றும், ஆற்றல் மிக அதிகம் தேவைப்படும் என்பதால் நாங்கள் உற்சாகத்துடள் உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Newstm.in