பிங்க் பந்துடன் பகல்-இரவு டெஸ்ட் நாளை தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 03:48 pm
day-night-test-starting-tomorrow-with-pink-ball

பிங்க் நிற பந்துடன் இந்திய - வங்கதேச அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பதவியேற்றபின் அவரது சொந்த மண்ணி பகல்-இரவு டெஸ்ட் நடைபெறுகிறது. ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவினர் பறந்துவந்து பிங்க் பந்தை 2 அணிகளின் கேப்டன்களிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியால் கொல்கத்தாவே பிங்க் நிறத்துடன் காட்சியளிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர். ஒருநாள் போட்டியில் பகல்-இரவு போட்டியை பார்த்து வந்த ரசிகர்களுக்கு, டெஸ்டில் பகல்-இரவு போட்டி என்பது ஒரு புதுவித அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும் என்று  அருதியிட்டு கூறலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close