முதன் முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் நிற பந்துடன் களமிறங்கவுள்ள இந்திய அணி

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 09:54 am
for-the-first-time-in-a-day-night-test-match-the-indian-team-will-field-today

இந்தியா - வங்கேச அணிகளின் முதல் பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் வெகுவிமர்சையாக தொடங்கவுள்ளது. 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதன் முறையாக பகல் -இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் விளையாடவுள்ளது. இந்திய அணிக்கு இது முதல் போட்டி என்பதால் தொடக்க நிகழ்ச்சிக்கு மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியா - வங்கதேச அணிகள் விளையாடும் முதல் பகல் - இரவு ஆட்டத்தை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 11 பகல் - இரவு போட்டிகள் நடந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஆஸிதிரேலியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close