பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி பந்து வீச்சு

  அனிதா   | Last Modified : 22 Nov, 2019 01:13 pm
day-night-test-cricket-indian-team-bowling

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பந்து வீச்சில் களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதன் முறையாக பகல் -இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் விளையாட களமிறங்கியுள்ளது. வரலாற்று நிகழ்வான இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.  முன்னதாக பகல்- இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் மணி அடித்து தொடங்கி வைத்தனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close