பகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் 106 ரன்களில் சுருண்டது  

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 04:48 pm
day-night-test-bangladesh-all-out

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 106 ரன்களில் இந்திய அணி சுருட்டியது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் வரும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை பந்துகளை சமாளிக்க முடியாமல் 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக இஸ்லாம் 29, லிண்டன் தாஸ் 24 ரன்களை எடுத்தனர்.இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடவுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close