முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/3

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 09:07 pm
174-3-at-the-end-of-the-first-day-s-play

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா ஈடர்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷாந்த் ஷர்மா 5, உமேஷ் யாதவ் 3, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வங்கதேச அணியில் அதிகபட்சமாக இஸ்லாம் 29, லிண்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல்நாள்  ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. புஜாரா 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலி 59, ரஹானே 23 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close