தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2019 03:00 pm
sanju-samson-inclusion-in-the-squad-to-replace-dhawan

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

3 டி20, 3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டி20 தொடரில் இடம்பெற்றிருந்த ஷிகர் தவானுக்கு, உள்ளூர் போட்டியில் விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், அந்த தொடரில் போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம் பெறாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close