டெஸ்டில் முச்சதம் அடித்து பிராட்மேனின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் 

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 05:11 pm
david-warner-breaks-bradman-s-record-in-test-cricket

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முதல் முச்சதம் அடித்து,  பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார்.

அடிலெயடில் நடைபெற்று வரும் 2ஆவது மற்றும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்டத்தில் விளையாடிய வார்னர் 339 பந்துகளில் 37 பவுண்டரிகள் உடன் தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த 7ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் வார்னர் பெற்றார்.

இதையடுத்து, ஆஸி.,யின் முன்னாள் வீரர், ஜாம்பவான் பிராட்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் ஆகியோர் டெஸ்டில் 334 ரன்கள் அடித்திருந்ததே, தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது வந்தது. 335 ரன்கள் எடுத்து இருவரின் சாதனையையும் வார்னர் முறியடித்தார். மேலும், அடிலெய்டில் பிராட்மேனின் 299 ரன்களான தனிநபரின் அதிகபட்ச ஸ்கோரையும் 300 அடித்து  வார்னர் முறியடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான், ஆஸி., பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 96 ரன்களே எடுத்துள்ளது. பாபர் ஆசம் 44, யாசிர் ஷா 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 
ஆஸி., தரப்பில் பாகிஸ்தான் வீரர்களை துவம்சம் செய்த ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close