பதிலடி கொடுக்கும் உத்வேகத்தில் இந்தியா! அனல் பறக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி!

  சாரா   | Last Modified : 18 Dec, 2019 01:59 pm
india-vs-westindies-cricket-2nd-odi

இந்தியாவுடனான டி-20 போட்டியில் தொடரை இந்தியாவிடம் இழந்த நிலையில், தற்போது இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதல் போட்டியில் இந்தியாவை வென்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றால், தொடரையும் தன்வசப்படுத்தும் என்பதால் இன்றைய போட்டி இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாகும்.

இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் இந்தியா நீடிக்க முடியும் என்பதால் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் முழு உத்வேகத்துடன் ஆடி வருகிறார்கள்.

இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிவம் டுபேவுக்குப் பதிலாக புதிதக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close