21வது உலகக்கோப்பை கால்பந்து பற்றிய 21 தகவல்கள்

  சௌந்தரியா   | Last Modified : 14 Jun, 2018 04:47 pm
21-interesting-facts-about-21st-edition-of-fifa-world-worldcup

ரஷ்யாவில் 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் தொடங்கும் போட்டி வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.  உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த கால்பந்து திருவிழா பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்..

1) உலகக்கோப்பை தொடரை நடத்தும் 17வது நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்தில் ஃபிபா உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. 

   

2) இந்த தொடரில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானத்தில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.   

3) இன்று மாஸ்கோவில் முதல் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகள் விளையாடுகின்றன. இந்த மைதானத்தில் 81 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கலாம்.

4) முதல்முறையாக இந்த தொடரை நடத்தும் ரஷ்யாவிற்கு உரிமை அடிப்படையில் தகுதி சுற்றுகளில் பங்கேற்காமல் தகுதி பெறும் வாய்ப்பு. தற்போது ரஷ்ய அணி தரவரிசையில் 65வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற 21 அணிகளும் தகுதிசுற்றில்வென்று தேர்வாகி உள்ளன.                                      

5) இந்த அணிகளில் 20 அணிகள் கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளன. மேலும் ஜஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் முதன்முறையாக தகுதிப்பெற்று களமிறங்குகின்றன.

6) பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பிறகும், எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகும், மொராக்கோ 20 ஆண்டுகளுக்கு பிறகும், செனகல் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகும் களமிறங்குகின்றன.

7) இதுவரை நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 5 முறை பிரேசில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, அணிகள் 4 முறை வென்றுள்ளன.

8) இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு ரூ .257 கோடி பரிசாக வழங்கப்படும். மொத்த பரிசு தொகையின் மதிப்பு ரூ.2700 ஆகும். ரஷ்யா இந்த தொடருக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

9) எக்காடெர்பர்க் மைதானத்தில் 27 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதிதான் முன்னர் இருந்தது. ஆனால் உலகக் கோப்பைக்காக இருக்கைகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது  அங்கு 45 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். இந்த  மைதானத்தில் 4 போட்டிகள் நடைபெறுகிறது. அதன் பின் அந்த இருக்கைகள் நீக்கப்படும். 

10) 2026ம் ஆண்டு நடக்கும் உலக கோப்பை தொடர் முதல் 48 அணிகள் விளையாட உள்ளதாக பிபா தலைவர் இன்பான்டினோ தெரிவித்துள்ளார். எனவே இதுவே 32 அணிகள் மோதும் கடைசி தொடராகும்.

11)  ஷ்யாவிற்கு போட்டிகளை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ரசிகர்களுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டையும் சில ஆவணங்களையும் காட்டினாளே போதுமானது.

12) எகிப்து அணியின் கோல்கீப்பருக்கு இது தான் முதல் உலக கோப்பை போட்டியாகும். இதில் என்ன சிறப்பு என்கிரீர்களா.. இருக்கிறது... அவருக்கு வயது 45. இசம் எல்-ஹதாரி இதுவரை அந்த நாட்டு அணிக்காக 156 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கம் பட்சத்தில் இது ஒரு சாதனையாக அமையும்.

13) ஜிம்பாப்வே அணிக்கும் இது தான் முதல் உலக கோப்பை. ஆனால் அந்த அணியை ஃபிபா தகுதி நீக்கம் செய்து விட்டது. அந்த அணி நிர்வாகம் முன்னாள் கோச்சான ஜோஸ் கிளவ்டினெய்க்கு ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்காததால் ஃபிபா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

14) இன்று தொடங்கும் உலக கோப்பையை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று (14-06-2018) சிறப்பு கூகுள் டூடுலை வெளியிட்டுள்ளது.

15) இன்றைய முதல் போட்டியில் விளையாடும் அணிகள் தரவரிசையில் பின் தங்கி உள்ளன. சவுதி அணி 68வது இடத்திலும், ரஷ்யா அணி 65வது இடத்திலும் உள்ளன.

16) Wolf Zabivaka™  இந்தாண்டு உலக கோப்பையின் சின்னமாக உள்ளது. இதனை ஆன்லைன் வாக்குபதிவு மூலம் தேர்வு செய்துள்ளனர்.https://newstm-static.s3.ap-south-1.amazonaws.com/uploads/common/2018/06/14/030411_Zabivaka-the-Wolf-Mascot-for-the-2018-FIFA-World-Cup-3-866x469.jpg

17) உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.  இந்த பூனை முதல் போட்டியில் ரஷ்யா வெற்றி பெரும் என்று ஆருடன் கூறியுள்ளது

18) போட்டிகள் நடக்கும் ரஷ்யாவின் கிழக்கில் இருக்கும் எக்கடெரின்பர்க் மைதானத்திற்கும் மேற்கில் இருக்கும் கலினின்கிராட் மைதானத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 2415 கிலோ மீட்டர். கிட்டதட்ட மாஸ்கோவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் தூரம் அது.

19) கால்பந்து திருவிழா ஸ்பெஷலாக செர்பிய சலூன் கடைக்காரர் தலையில் மெஸ்ஸி, ரொனால்டோ உள்ளிட்டோரின் உருவத்தை ஹேர் கட்டிங் செய்கிறார்.

20) ரஷ்ய நாட்டு கால்பந்து ரசிகர்கள் 41 சதவீத டிக்கெட்களை வாங்கியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா மற்றும் சீன ரசிகர்கள் உள்ளனர்.

21) கிட்டத்தட்ட 5 லட்சம் ரசிகர்கள் இந்த போட்டிகளை பார்க்க வெளிநாடுகளில் இருந்து ரஷ்யா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close