உலகக் கோப்பை யாருக்கு? - ஆப்பிளைத் தின்று கூறும் பன்றி! (வீடியோ)

  Padmapriya   | Last Modified : 14 Jun, 2018 05:01 pm
psychic-pig-mystic-marcus-sniffs-out-the-world-cup-winner

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றி பெறபோகும் நாடு எது என்று, பன்றி எந்த அப்பிள் பழத்தை சாப்பிடுகிறது என்பதை வைத்து கணிக்கிறது ஒரு கூட்டம்.  

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வைத்து நடத்தப்படும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. எந்த அணி வெற்றி பெறும் என்பதற்கு ஆக்டோபஸ், நாய், கிளி, ஆமை போன்ற உயிரினங்களின் செய்கைகளை கவனிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பை போட்டியை வைத்து வியூகம் செய்யும் பட்டியலில் பன்றி இணைந்துள்ளது. 

மிஸ்டிக் மார்கஸ் என்ற பெயருடைய அந்தப் பன்றியின் கூண்டுக்கு அருகே கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் நாடுளின் கொடி பொறித்த ஆப்பிள் பழங்களை வைக்கின்றனர். எந்தக் கொடி பறக்கும் பழத்தை இந்தப் பன்றி ருசிக்கிறதோ, அந்த நாடு வெற்றி பெறும் என்பதே இந்த ஜோசியமாம். இதன் மீதான நம்பிக்கைக்கு பெறும் வரவேற்பு இருப்பதாய் அதனைக் காண வரும் கூட்டத்தை வைத்து கூறிவிடலாம் போல.  அந்த அளவுக்கு இந்தப் பன்றியை காண வரும் கூட்டம் உள்ளது. 

இந்தப் பன்றி ஏற்கனவே அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப்ப் தான் வெற்றி பெறுவார் என்றும், பிரக்ஸிட் ஒப்பந்தத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என்பதையும் கணித்திருந்தது. இந்த இரண்டு சரியாக போக, நம்பிக்கை உயர்ந்துள்ளது. 

அந்த வகையில், உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில், இந்த ஆண்டு அரை இறுதிக்கு நைஜீரியா, உருகுவே, பெல்ஜியம் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய  நாடுகள் தகுதியடையும் என்று கணித்துள்ளது. இதே போல் கடந்த உலகக் கோப்பையின் போது பால் என்ற ஆக்டோபஸின் செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close