உலகக் கோப்பை: ரஷ்யா அதிரடி துவக்கம்; 2-0 என முன்னிலை!

  shriram   | Last Modified : 14 Jun, 2018 11:24 pm
half-time-russia-takes-2-0-lead-over-saudi

ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையேயான போட்டியுடன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் துவங்கியுள்ளது.  கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நடந்த துவக்க விழாவை தொடர்ந்து, தலைநகர் மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. 

சொந்த மண்ணில், சுமார் 80,000 ரசிகர்களின் முன்னிலையில் விளையாடிய ரஷ்யா, அதிரடியாக போட்டியை துவங்கியது. 12வது நிமிடத்தின் போது, ரஷ்யாவுக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, யூரி கசின்ஸ்கி கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 24வது நிமிடத்தின் போது, ரஷ்ய வீரர் ஆலன் ஜாகோவ் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதில், நட்சத்திர வீரர் செரிஷெவ் களமிறக்கப்பட்டார். முதல் பாதி முடிய இரண்டு நிமிடங்களுக்கு முன், அற்புதமான கவுன்டர் அட்டாக் வைய்ப்பை பயன்படுத்தி மாற்று வீரராக வந்த செரிஷெவ் அசத்தல் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close