அர்ஜென்டினாவை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வெல்லும்: டேவிட் பெக்கஹம்

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 05:38 pm
david-beckham-predicts-the-winning-team-of-fifa-2018

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று கூறியுள்ளார் டேவிட் பெக்கஹம்.

ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி, கடந்த 14ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை 15ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் எந்த அணி, எந்த அணியுடன் மோத போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், இந்த அணி தான் போட்டியிட்டு ஜெயிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முன்னாள் கால்பந்து லெஜெண்ட் இங்கிலாந்தின் டேவிட் பெக்கஹம். 

கேப்டனாக பெக்கஹம் இருந்த போது, 2006ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பை காலிறுதியை எட்டி இருந்தது. இந்த நிலையில் பெக்கஹம் கூறுகையில், "நான் நினைக்கிறன், அர்ஜென்டினா அணி, ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். மேலும், என்னுடைய விருப்பம் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டுமென்பது தான். இது ஒரு சார்புடையது என்றாலும் என் நாடு வெற்றி பெற வேண்டுமென்கிற எனது ஆசை" என்றார். 

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடியுள்ள பெக்கஹம், "இங்கிலாந்து குரூப்பில் தனது முதல் போட்டியை வென்றதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து மிகவும் இளம் அணி. அவர்கள் போதிய அனுபவத்தை இன்னும் பெறவில்லை. இந்த உலக கோப்பையில் அவர்களது பயணம் கடினத்திலும் கடினமாக இருக்கும். ஏனெனில் தொடரில் பல நல்ல அணிகள் உள்ளன" என்று தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close