இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 09:05 pm
arrest-warrant-against-india-cricket-star-mohammed-shami

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் அவரை கைது செய்ய அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜகான், தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரர் ஹஸித் அகமத் ஆகிய இருவரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு முகமது ஷமி நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று பலமுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இதுவரை முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த சூழ்நிலையில் 15 நாட்களுக்குள் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close