பார்சிலோனா சென்றார் பிரேசில் நட்சத்திர வீரர் கௌட்டினோ!

  SRK   | Last Modified : 07 Jan, 2018 03:15 pm


பிரேசில் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் பிலிப்பே கௌட்டினோ, நேற்று பார்சிலோனா அணியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்தார். லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த அவரை, கடந்த வருடமே பார்சிலோனா வாங்க முயற்சி செய்தது. ஆனால், லிவர்பூல் அவரை விற்க மறுத்துவிட்டது. கௌட்டினோ தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கடந்த 6 மாதங்களில் மிகச்சிறப்பாக விளையாடிய அவரை மீண்டும் வாங்க பார்சிலோனா பேச்சுவார்த்தை நடத்தியது. 25 வயதான அவர், தனது தரப்பில் இருந்தும் பார்சிலோனாவில் சேர ஆர்வம் காட்டினார். மிக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், லிவர்பூல் சுமார் ரூ.1,200 கோடிக்கு (£142 மில்லியன்) கௌட்டினோவை விற்க ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை பார்சிலோனா தரப்பு உறுதி செய்துள்ளது. 

2013ம் ஆண்டு சுமார் ரூ.73 கோடிக்கு (£8.5 மில்லியன்) லிவர்பூலில் சேர்ந்த கௌட்டினோ மிட்பீல்டராக விளையாடுபவராவார். லிவர்பூலுக்காக 153 போட்டிகளில் 41 கோல்கள் அடித்துள்ளார். பிரேசில் தேசிய அணிக்காக 32 போட்டிகள் விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close