ஐ.எஸ்.எல்: மும்பையை வீழ்த்தியது கேரளா

  SRK   | Last Modified : 15 Jan, 2018 08:24 am


நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து லீக் போட்டிகளில், 5வது இடத்தில் இருந்த மும்பையுடன் 7வது இடத்தில் இருந்த கேரளா மோதியது. 

முதலில் மும்பை சிறப்பாக விளையாடினாலும், 23வது நிமிடத்தில், கேரளா அணியின் நட்சத்திர வீரர் ஹூம், ஒரு கோல் அடித்து மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்தார். ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்திய கேரளா அணியின் பெகுசன், ஹுமிற்கு அதை பாஸ் செய்ய, அவர் எளிதாக கோல் போட்டார்.

அதன்பின், மும்பை அணியால் கடைசி வரை கேரளாவின் தடுப்பரணை தாண்டி கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளையின் போது ஒரு எளிதான வாய்ப்பு கிடைத்தாலும், மும்பை அணியின் பல்வந்த் சிங் அதை கோட்டை விட்டார். கேரளா 1-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் மும்பை அணிக்கு நிகராக 14 புள்ளிகள் பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது கேரளா. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close