ஃபிபா உலகக்கோப்பை ட்ராஃபி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது!

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 03:50 pm


2018- ஃபிபா உலகக்கோப்பை ட்ராஃபி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வழக்கப்பட்டுள்ளது.


2018ம் ஆண்டுக்கான ஃபிபா உலகக்கோப்பை போட்டி, வரும் ஜூன் மாதம் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 54 நாடுகளில் மக்களின் பார்வைக்காக உலகக்கோப்பை ட்ராஃபி கொண்டு செல்லப்படுகின்றது. முதலாவதாக இலங்கைக்கு உலகக்கோப்பை ட்ராஃபி கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்நிலையில், உலகக்கோப்பை ட்ராஃபியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்,விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா மற்றும் இலங்கை கால்பந்து  அணி உறுப்பினர்களும் 1998ம் ஆண்டு உலகக்கோப்பை ட்ராஃபியை  வென்ற பிரான்ஸ் கால்பந்து குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.


ஆசிய நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு மட்டுமே 2018 – உலகக்கோப்பை ட்ராஃபி கொண்டு செல்லப்படவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த உலகக்கோப்பை ட்ராஃபி, மக்களின் பார்வைக்காக பண்டாரநாயக்க நினைவு  மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

2018ம் அண்டுக்கான ஃபிபா உலகக்கோப்பை போட்டி ஜுன் மாதம் 14ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close