ஐ.எஸ்.எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களூரு

  SRK   | Last Modified : 06 Feb, 2018 10:27 pm


நடந்து வரும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், சென்னையின் எஃப்சி அணி, பெங்களூருடன் இன்று மோதியது. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இரு அணிகளும் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மோதின. 

போட்டி துவங்கிய 2வது நிமிடத்திலேயே பெங்களூரு அணியின் போய்தங் ஹகிப்  கோல் அடித்து சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர், சென்னை அணியின் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் 33வது நிமிடத்தில் கோலடிக்க, முதல் பாதி 1-1 என முடிந்தது. 

இரண்டாவது பாதியில் பெங்களூரு அணியின் மிகு கோல் அடித்து மீண்டும் முன்னிலை கொடுத்தார். அதன்பின் சென்னை சிறப்பாக விளையாடியது. சென்னை கோல் அடிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரம், சென்னையின் ஹென்றிக்கே செரினோ, என்ற வீரர் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். சில நிமிடங்களில், சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை நட்சத்திர வீரர் ஜேஜே வீணாக்கினார்.

94வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி கோல் அடிக்க போட்டி 3-1 என முடிந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close