ஐ.எஸ்.எல்: போராடும் சென்னை டெல்லியுடன் சமன்!

  SRK   | Last Modified : 12 Feb, 2018 09:26 am


ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகளில், சென்னையின் எஃப்.சி அணியுடன் டெல்லி டைனமோஸ் அணி மோதியது. புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ள சென்னை, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வரும் நிலையில், கடைசி இடத்தில் மோசமான நிலையில் உள்ள டெல்லியுடன் மோதியது. 

முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிவுக்கு வந்தது. இரண்டாவது பாதியில், 59வது நிமிடத்தின் போது, சென்னை அணியின் அகுஸ்டோ, டெல்லியின் மிராபாஜேயை பெனால்டி பாக்ஸ் உள்ளே வைத்து பவுல் செய்தார். இதைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி வாய்ப்பை டெல்லி கேப்டன் கலு உச்சே கோல் அடித்தார்.

பின்னர் போட்டியை சமன் செய்ய போராடி வந்த சென்னை அணியின், மெயில்சன் ஆல்வெஸ் 81வது நிமிடத்தில் கோல் அடித்தார். போட்டி 1-1 என சமனாக முடிந்தது. 

மற்ற அணிகளை விட ஒரு போட்டி கம்மியாக விளையாடியுள்ள சென்னை, 24 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி கடைசி இடத்தில் நீடிக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close