ஐ.எஸ்.எல்: மீண்டும் வென்றது பெங்களூரு

  SRK   | Last Modified : 25 Feb, 2018 10:28 pm


நடந்து வரும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில், ஜாம்ஷெட்பூர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு. 

லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரு அணி, ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 17 போட்டிகள் விளையாடியுள்ள அந்த அணி, 37 புள்ளிகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ள புனே அணியை விட 8 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வரும் ஜாம்ஷெட்பூர் அணி, முழு ஆதிக்கம் செலுத்தி வரும் பெங்களூரு அணியுடன் மோதியது.

பெங்களூரு அணிக்கு 23வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை மிகு கோலக்கினார். அதன்பிறகு 34வது நிமிடத்தில், சுனில் சேத்த்ரி கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. 90வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மெஹ்தப் ஹொசேயின் ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அடுத்து வரவிருக்கும் போட்டிகளில், கோவா, மும்பை, கேரளா ஆகிய அணிகள் தோல்வியடைந்து தாங்களும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற இக்கட்டான சூழ்நிலையில் ஜாம்ஷெட்பூர் அணி உள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.