ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

  SRK   | Last Modified : 28 Feb, 2018 09:01 am


ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில், பலம்வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை, எஸ்பான்யோல் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

லீக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ரியல் மாட்ரிட்டின் எதிரி அணியான பார்சிலோனாவுக்கே அதிகம் உள்ளது. முதலிடத்தில் உள்ள அந்த பார்சிலோனா, ரியல் மாட்ரிட்டை விட 14 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. எனவே லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் வெல்வது மிக மிக கடினம். அதனால், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த வாரம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் முக்கிய ஆட்டம் உள்ளதால், நேற்று எஸ்பான்யோல் அணிக்கு எதிரான போட்டியில், ரொனால்டோ, மாட்ரிச், பென்சீமா போன்ற முன்னணி வீரர்கள் விளையாடவில்லை.

ஆரம்பம் முதலே, கத்துக்குட்டியான எஸ்பான்யோல், ரியல் மாட்ரிட்டை தவிக்க விட்டது. எஸ்பான்யோலுக்கு  பல கோல் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், அந்த அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 91வது நிமிடத்தின் போது, எஸ்பான்யோலின் மொரேனோ கோல் அடித்து கடைசி நொடிகளில் தனது அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். 1-0 என எஸ்பான்யோல் வென்றது.

நாளை நடக்கவிருக்கும் போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றால், ரியல் மாட்ரிட்டை விட 17 புள்ளிகள் முன்னிலை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close