சென்னை சிட்டி வெற்றியால் சுவாரஸ்யமான இறுதிகட்டத்தை எட்டியது ஐ-லீக்

  SRK   | Last Modified : 03 Mar, 2018 07:54 am


இந்தியாவில் நடக்கும் இரண்டாவது முக்கிய கால்பந்து தொடரான ஐ-லீகில் நேற்று நடந்த முக்கிய போட்டியில், சென்னை சிட்டி அணி, லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மினர்வாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. 

2 போட்டிகள் எஞ்சியிருந்த நிலையில், ஐ-லீக் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட மினர்வா அணி, தற்போது கடைசி போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

போட்டி துவங்கியவுடன் 5வது நிமிடத்தில் சென்னை சிட்டியின் மைக்கேல் சூசைராஜ் கோல் அடித்தார். ஆனால், 26வது நிமிடத்தில் மினர்வாவின் செஞ்சொ கியெல்ட்சென் கோல் அடித்து சமன் செய்தார். 

இரண்டாவது பாதியில் 60வது நிமிடத்தின் போது, அலெக்ஸாண்டர் ராக்கிச் கோல் அடித்து சென்னை வெற்றி பெற உதவினார். சென்னை சிட்டியின் கடைசி போட்டியான இதில் வெற்றி பெற்றதோடு, 19 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

முதல் 4 இடங்களில் உள்ள மினர்வா, நெரோகா, கிழக்கு பெங்கால், மொகுன் பாகுன் ஆகிய அணிகள், எஞ்சியுள்ள ஒன்றிரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதால், ஐ-லீக் மிக சுவாரஸ்சயமான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close