ஐஎஸ்எல்: மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தத்தை நீடித்தது சென்னையின் எஃப்சி

  நந்தினி   | Last Modified : 21 Mar, 2018 03:53 pm


ஐஎஸ்எல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மெயில்சன் அல்வ்ஸ், கிரிகோரி நெல்சனின் ஒப்பந்த காலத்தை சென்னையின் எஃப்சி நிர்வாகம் நீடித்து உள்ளது.

பெங்களூரு  எஃப்சி அணியுடனான இறுதி ஆட்டத்தில், சென்னை அணியின் நெல்சன் கொடுத்த கார்னர் கிக்கை, தலையில் முட்டி அற்புதமாக கோலடித்தார் மெயில்சன். இதனால் சென்னையின் எஃப்சி அணி 3-2 என பெங்களூருவை வீழ்த்தி, இரண்டாவது முறையாக ஐஎஸ்எல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிரேசிலை சேர்ந்த மெயில்சன், இந்த தொடர் முழுவதும் கேப்டன் ஹென்ரிக் செரினோவுடன் சேர்ந்தது தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார். இந்த சீசனில் அதிக கோலடித்த தடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் மெயில்சன் பெற்றார். மேலும், இந்த சீசனில் சென்னை அணியின் ஐந்து கோல்களுக்கு உதவியாக இருந்தார். 

இதனால், சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்த மெயில்சனின் ஒப்பந்தம் இரண்டு ஆண்டுகளாகவும், நெல்சனின் ஒப்பந்தம் ஓராண்டாகவும் நீடிக்கப்பட்டுள்ளது. தவிர, சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரியின் ஒப்பந்தமும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டு இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close