ஆர்சனலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மான்செஸ்டர் சிட்டி

  SRK   | Last Modified : 26 Feb, 2018 09:14 am


நேற்று லண்டனில் நடந்த கரபாவ் கோப்பையின் இறுதி போட்டியில், ஆர்சனல் அணியை மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கால்பந்து போட்டிகளில், பிரீமியர் லீக், எஃப்.ஏ கோப்பைக்கு அடுத்து, இந்த கரபாவ் கோப்பை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னணி அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரின் இறுதி போட்டி, நேற்று ஆர்சனல் அணிக்கு சொந்தமான எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 

பிரீமியர் லீக் பட்டியலில் முன்னணியில் உள்ள மான்செஸ்டர் சிட்டி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல, மான்செஸ்டர் சிட்டி முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. துவக்கத்தில் ஆர்சனல் அணிக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அந்த அணியின் முன்னணி வீரர் ஆபமயாங் வீணாக்கினார்.

18வது நிமிடத்தின் போது, மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ ஆகுவேரோ, கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில் சிட்டி அணியின் வின்சென்ட் கம்பெனி 58வது நிமிடத்திலும், டேவிட் சில்வா 65வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். போட்டி 3-0 என முடிந்தது.

மான்செஸ்டர் சிட்டி அணி கடந்த 4 ஆண்டுகளில் இந்த கரபாவ் கோப்பையை வெல்வது இது 3வது முறை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close