செல்சியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

  SRK   | Last Modified : 05 Mar, 2018 10:20 pm


நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில், லீக் தொடரில் 15 புள்ளிகள் முன்னிலையில் உள்ள மான்செஸ்டர் சிட்டி, நடப்பு சாம்பியன் செல்சியுடன் மோதியது. 

மோசமான பார்மில் உள்ள செல்சி, ஆரம்பம் முதலே தடுப்பு ஆட்டம் ஆடியது. மான்செஸ்டர் சிட்டியை கோலடிக்கவிடாமல் தடுப்பதிலேயே செல்சி வீரர்கள் குறியாக இருந்தனர். அதனால், முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிந்தது. 

ஆனால், இரண்டாவது பாதி துவங்கிய சில வினாடிகளிலேயே, மான்செஸ்டர் சிட்டியின் பெர்னார்டோ சில்வா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அதன்பின் செல்சி அணியால் சிட்டியிடம் இருந்து பந்தை பெறவே முடியவில்லை. 

முழு ஆதிக்கம் செலுத்திய சிட்டி வீரர்கள் இறுதியில் 1-0 என வென்றனர். தற்போது சிட்டி முதலிடத்தில் 18 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது. செல்சி 5வது இடத்தில் உள்ளது. 

இன்னும் 9 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், லீக் தொடரை வெல்வது மட்டுமல்லாமல், 100 கோல்கள் அடித்து சாதனை படைக்கவும் சிட்டிக்கு வாய்ப்புள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close