மான்செஸ்டர் சிட்டியை அபாரமாக வீழ்த்தியது யுனைட்டட்!

  SRK   | Last Modified : 08 Apr, 2018 01:49 pm


இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில், நேற்று மான்செஸ்டர் யுனைட்டட் மற்றும் சிட்டி அணிகள் மோதின. பெரும் புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தில் இருந்த மான்செஸ்டர் சிட்டி, இந்த போட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ள யுனைட்டட்டை வீழ்த்தினால், கோப்பையை நேற்று வென்றுவிடலாம் என்ற நிலையில் விளையாடியது. 

ஆட்டம் துவங்கிய 25வது நிமிடத்தில் வின்சென்ட் கம்பெனியும், 30வது நிமிடத்தில் குண்டகணும் கோல் அடித்து சிட்டிக்கு முன்னிலை கொடுத்தனர். முதல் பாதி 2-0 என முடிய, சிட்டி அணியின் வெற்றி உறுதி என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் யுனைட்டட், அசத்தலாக விளையாட, முதல் 10 நிமிடங்கலேயே பால் போக்பா 2 கோல்கள் அடித்து சமன் செய்தார். 69வது நிமிடத்தில் ஸ்மாலிங் கோல் அடித்து யுனைட்டட் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். 

இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், சிட்டி 13 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் மற்றொரு கடினமான லீக் போட்டியில் டாட்டன்ஹேம் அணியுடன் சிட்டி மோதுகிறது. இதிலும் இதன் அடுத்த போட்டியிலும் வெற்றி பெறும்போது, சிட்டி கோப்பையை வெல்லும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close