சாம்பியன்ஸ் கோப்பை: லிவர்பூல் த்ரில் வெற்றி!; இறுதி போட்டிக்கு செல்கிறது

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 06:05 am


ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று லிவர்பூல் ரோமாவுடன் மோதியது. 

இரண்டு போட்டிகளாக நடைபெறும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் லிவர்பூல் தனது சொந்த மண்ணில், 5-2 என வெற்றி பெற்றது. 5-0 என முன்னிலை பெற்ற நிலையில், கடைசியில் சொதப்பி இரண்டு கோல்களை அடிக்க விட்டனர்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டி, இத்தாலியின் ரோம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியை போலவே, லிவர்பூல் உடனடி கோல் அடித்தது. 9 நிமிடத்தில், சாடியோ மானே கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். 

ஆனால், 15வது நிமிடத்தில், ரோமா அடித்த ஒரு பந்து, லிவர்பூல் வீரர் மில்னர் மீது பட்டு கோலானது. அதன்பின், 25வது நிமிடத்தில் லிவர்பூல் மற்றொரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தது. அந்த சமயம் இன்னும் ரோமாவுக்கு மூன்று கோல்கள் அடிக்கவேண்டிய நிலை.

தொடர்ந்து தாக்கி விளையாடி வந்த ரோமா, 52வது நிமிடத்தில் ஜெக்கோ அடித்த கோலால் போட்டியை சமன் செய்தது. பின்னர் 86 மற்றும் 94வது நிமிடங்களில் ரோமாவின் நாய்ங்கோலன் மேலும் இரண்டு கோல்கள் அடித்தார். பதற்றமான கடைசி நிமிடங்களில் மற்றொரு கோல் அடித்தால் இறுதிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்பதால் முழு ஆதிக்கம் செலுத்தி விளையாடியது ரோமா. ஆனால்,  முடியாததால், போட்டி 4-2 ஏன் முடிந்தது.

 நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் ரியல் மாட்ரிட் தகுதி பெற்றது. இறுதி போட்டியில் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் விளையாடுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close