இங்கிலாந்து பிரீமியர் லீக்: சிறந்த வீரர் விருது பெற்றார் முஹம்மது சாலா!

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 07:11 pm


பிரபல இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் 2018ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை, லிவர்பூல் அணியில் விளையாடும் முஹம்மது சாலா பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ரோமாவில் இருந்து லிவர்பூல் அணியில் சேர்ந்த சாலா, இந்த பிரீமியர் லீக் சீசனில் அட்டகாசமாக விளையாடி கோல்களை குவித்தார். 25 வயதான சாலா, இந்த சீசனில் இதுவரை விளையாடியுள்ள 31 போட்டிகளில், 35 கோல்கள் அடித்துள்ளார். பிரீமியர் லீக் பட்டியலில் 72 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் லிவர்பூல், ஐரோப்பிய க்ளப் கால்பந்தின் சிறந்த போட்டியாக கருதப்படும் சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் உள்ளது. 

இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் சாலா. மான்செஸ்டர் சிட்டி அணியின் கெவின் டி ப்ரூய்ன், யுனைடட் அணியின் டேவிட் டி கியா ஆகியோருடன் கடும் போட்டியில் இருந்த சாலா, இணையதளத்தில் நடந்த வாக்குப்பதிவில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதை பெற்றவுடன் பேசிய சாலா, "எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது மிகப்பெரிய மரியாதை. பிரீமியர் லீகிற்கு திரும்ப வர வேண்டும். இங்குள்ளவர்களுக்கு என்னால் இங்கு சாதிக்க முடியும் என்பதை காட்ட வேண்டும் என ஆசைப்பட்டேன். எனது வெற்றிக்கு லிவர்பூல் பயிற்சியாளர் யர்கன் க்ளாப் ஒரு முக்கிய காரணம்" என கூறினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close