ஆர்சனல் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார் எமெரி!

Last Modified : 23 May, 2018 04:33 pm


லண்டனை சேர்ந்த பிரபல ஆர்சனல் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் பாரிஸ் பயிற்சியாளர் உனாய் எமெரி நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரான்ஸின் தலைசிறந்த கால்பந்து அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மனின் பயிற்சியாளராக உனாய் எமெரி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதற்கு முன், வாலென்சியா, செவில்லா போன்ற ஸ்பெயின் க்ளப் அணிகளில் அவர் பணியாற்றியுள்ளார். அதன்பின், இரு ஆண்டுகளுக்கு முன் பணபலம் வாய்ந்த பாரிஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளாக சாம்பியன்ஸ் லீக் தொடரில், எதிர்பார்த்த அளவு முன்னேற்றாம் இல்லாததால், அவர் 2017-18 சீசன் முடிந்தவுடன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்தின் தலைசிறந்த க்ளப் அணிகளுள் ஒன்றான ஆர்சனலின் பயிற்சியாளராக 22 ஆண்டுகள் இருந்த ஆர்சீன் வெங்கர், தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, ஆர்சனல் தற்போது எமெரியை நியமித்துள்ளது. 

உனாய் எமெரி, இதுவரை, ஸ்பெயின் நாட்டின் செவில்லா அணிக்காக 3 யூரோப்பா கோப்பைகளையும், பாரிஸ் அணிக்காக 1 பிரென்ச் லீக் கோப்பையையும் வென்றுள்ளார். 

மிகவும் அனுபவம் வாய்ந்த இவரது நியமனம், உலகம் முழுவதும் உள்ள ஆர்சனல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close