மெஸ்ஸி ஹேட்ட்ரிக்: அர்ஜென்டினா அசத்தல் வெற்றி

  shriram   | Last Modified : 31 May, 2018 08:51 am
messi-hattrick-gives-4-0-win-over-haiti-in-wc-warmup

உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற வாரம்அப் போட்டியில், அர்ஜென்டினா, ஹெய்தியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஹேட்டரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.

அடுத்த மாதம் ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடவுள்ள அர்ஜென்டினா அணி மீது பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு உள்ளன. உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் சொதப்பலாக விளையாடி, உலகக் கோப்பை வாய்ப்பை இழக்கும் தருவாயில் இருந்த அந்த அணியை நட்சத்திர வீரர் மெஸ்ஸி மீட்டார். அதன்பின் நட்பு போட்டியில் ஸ்பெயினுடன் அர்ஜென்டினா விளையாடிய போது மெஸ்ஸி காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போது ஸ்பெயின் அர்ஜென்டினாவை 6-1 என வீழ்த்தியது. மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டினா உலகக் கோப்பையில் பெரும்பாடு படும் என நம்பப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நட்பு போட்டியில், ஹெய்தியுடன் அர்ஜென்டினா விளையாடியது. இதில் மெஸ்ஸி ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தது மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அசத்தினார். இறுதியில் போட்டி 4-0 என முடிந்தது. இந்த வெற்றி அர்ஜென்டினா ரசிகர்களை பூரிக்க வைத்தாலும், இதே ஃபார்மை உலகக் கோப்பைக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற சந்தேகத்திலேயே பலர் உள்ளனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close