இந்திய அணி கேப்டனின் 100வது மேட்ச்:ரசிகர்கள் வருவார்களா?

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 09:49 am
sunil-chhetri-s-100th-match

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இன்று தனது 100வது போட்டியில் விளையாடுகிறார். 

இந்திய கால்பந்து அணியை தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்கு கொண்டு சென்றவர் கேப்டன் சுனில் சேத்ரி. இவர் நேற்று முன் தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கால்பந்து போட்டிகளுக்கும் ஆதரவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவிற்கு சச்சின்,  கோலி உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தற்போது 4 கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, இன்று நடக்கும் போட்டியில் கென்யா கால்பந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். 

இதுவரையில் 99 போட்டிகளில் பங்கேற்றுள்ள சுனில் சேத்ரி 59 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இன்று நடைபெறும் போட்டியின் மூலம், 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்து தொடர்ந்து விளையாடி வரும் வீரர்கள் பட்டியலில் சுனில் 59 கோல்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரொனால்டோவும், இரண்டாவது இடத்தில் மெஸ்ஸியும் உள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியை காண சுனிலின் கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close