• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ஸ்பெயின் உலகக் கோப்பை கனவு தகர்ந்ததா? பயிற்சியாளர் அதிரடி நீக்கம்!

  shriram   | Last Modified : 14 Jun, 2018 04:37 pm

spain-fa-sack-coach-julen-lopetegui-the-day-before-world-cup-begins

ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜுலென் லோபெட்கி உலகக் கோப்பை முடிந்தவுடன் பிரபல ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, ஸ்பெயின் கால்பந்து கழகம் அவரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகக் கோப்பை நாளை துவங்குகிறது. 2010ம் ஆண்டின் உலக சாம்பியனான ஸ்பெயின், சரிவில் இருந்து மீண்டு, புதிய பயிற்சியாளர் லோபெட்கியின் கீழ் அதிரடியாக விளையாடி வருகிறது. இதுவரை உலகக் கோப்பை தகுதி சுற்றில் விளையாடிய 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், 9 வெற்றி ஒரு டிரா அசத்தலாக விளையாடியாது ஸ்பெயின். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டை மையமாக கொண்ட ரியல் மாட்ரிட், உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பாக கருதப்படுகிறது. அந்த அணியின் பயிற்சியாளரான ஸிடேன், சில தினங்களுக்கு முன், அணியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த பிறகு, புதிய பயிற்சியாளரை மாட்ரிட் தேடி வந்தது.

லோபெட்கியின் சாதனைகளை பார்த்த ரியல் மாட்ரிட் அவரை பயிற்சியாளராக நியமித்தது. கடந்த மாதம் ஸ்பெயின் அணியுடன் 2020 வரை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லோபெட்கி, தற்போது திடீரென உலகக் கோப்பை முடிந்தபின் ரியல் மாட்ரிட் செல்லவுள்ளதால், ஸ்பெயின் கால்பந்து கழகத்தின் தலைவர் ரூபியாலெஸ் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிய வந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பை அழைத்த அவர், லோபெட்கியை பணி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கு ஒரு நாள் முன்னதாக  இந்த அறிவிப்பு வந்துள்ளதால், ஸ்பெயின் அணி வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

நாளை மறுநாளில், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வென்ற பலம்வாய்ந்த போர்ச்சுகல் அணியுடன் ஸ்பெயின் மோதவுள்ளதால், இந்த மோசமான மனநிலையில் ஸ்பெயின் ஜெயிப்பது மிக கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close