அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2026 உலகக் கோப்பை!

  shriram   | Last Modified : 14 Jun, 2018 04:36 pm
canada-usa-and-mexico-wins-joint-bid-to-host-fifa-world-cup-2026

ரஷ்யாவில் இன்று முதல் கால்பந்து உலகக் கோப்பை துவங்கவுள்ள நிலையில், 2026ம் ஆண்டின் உலகக் கோப்பை எங்கு நடக்கவுள்ளது என ஃபிபா தெரிவித்துள்ளது. 2026ல் வடஅமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ சேர்ந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன. 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை மோகம் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களை தாக்கியுள்ளது. இந்த முறை ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை, 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. மிகவும் சர்ச்சைக்குரிய முறையில், 2022 உலகக் கோப்பை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டது. கத்தார் அரசிடம் லஞ்சம் பெற்றுவிட்டு அந்நாட்டிற்கு உலகக் கோப்பை காண்ட்ராக்ட்டை ஃபிபா வழங்கியதாக கூறப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் நாடு பற்றிய அறிவிப்பு மீது அனைவரது பார்வையும் இருந்தது. 

மொரோக்கோ நாட்டிற்கும் அமெரிக்கா-மெக்சிகோ -கனடா நாடுகளின் கூட்டணிக்கு இடையே இறுதி போட்டி இருந்தது. அதிக ஓட்டுக்களை வடஅமெரிக்க கூட்டணி பெற்றது. கத்தார் போல அல்லாமல், ஏற்கனவே கால்பந்து உலகக் கோப்பையை நடத்திய அனுபவம் உள்ளதாலும், தேவையான கால்பந்து மைதானங்களும் க்ளப் போட்டிகளுக்காக பயன்பாட்டில் உள்ளதாலும், அமெரிக்கா- கனடா-மெக்சிகோ கூட்டணி பெருவாரியான வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close