கடைசி நிமிட கோல்... உருகுவே த்ரில் வெற்றி!

  shriram   | Last Modified : 16 Jun, 2018 08:09 pm
world-cup-uruguay-beat-egypt-in-last-minute-goal-thriller

2018 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டவது போட்டியில், பலம்வாய்ந்த உருகுவே, கடைசி நிமிட கோல் மூலம் எகிப்தை போராடி வென்றது. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கி நேற்று நடந்த முதல் போட்டியில், குரூப் A-வில் உள்ள ரஷ்யா, சவுதி அரேபியாவை 5-0 என வீழ்த்தியது. அதே குரூப்பை சேர்ந்த மற்ற இரண்டு அணிகளான உருகுவே மற்றும் எகிப்து இன்று மோதின. இந்த போட்டியில், காயத்தில் இருந்து மீண்டு வரும் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முஹம்மத் சாலா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அவர் விளையாடவில்லை. 

துவக்கம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி ஒருவரை ஒருவர் கோல் அடிக்க விடாமல் செய்தனர். இரண்டாவது பாதியில் உருகுவே பல வாய்ப்புகளை உருவாக்கி கோல் அடிக்க முயற்சி செய்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் எடின்சன் கவானி, ப்ரீகிக் வாய்ப்பை அடிக்க, அது கோல் போஸ்ட்டில் பட்டு எகிறியது. சாலா இல்லாமல் எகிப்து அணியால் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. எகிப்து கோல் கீப்பர், எல் ஷெனவி, அசத்தலாக விளையாடி சுவாரஸ் மற்றும் கவானி அடித்த ஷாட்களை 3 முறை அருமையாக தடுத்தார். ஆனால், ஆட்டம் முடியும் 90வது நிமிடத்தில், கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, உருகுவேயின் ரவுல் ஹிமினெஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். 

அதன்பின், எகிப்து அணியின் அட்டாக் வீரர் ட்ரெஸெகே-வுக்கு காயம் ஏற்பட அவரால் சரியாக விளையாட முடியவில்லை. போட்டி 1-0 என முடிந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, குரூப் A-வில் இரண்டாவது இடத்தில் உருகுவேயும், 3வது இடத்தில் எகிப்தும் உள்ளன. முதல் போட்டியில் 5 கோல் வித்தியாசத்தில் வென்றதால் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close