வெற்றியை பதிவு செய்ய தவறிய அர்ஜென்டினா!

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 10:44 am
iceland-relives-historic-euro-cup-run

ஃபிபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையே நடந்த லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து மோதின. இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இந்த முறைதான் ஐஸ்லாந்து அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. பல முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான பலமான அர்ஜென்டினா அணியின் ஆட்டம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 

ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, அடுத்த மூன்று நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் ஆல்பிஃரட் பின்பகாசன்  கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. முதல் அரை பாதையில் வேறு எந்த கோலும் விழவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், போட்டி டிராவில் முடிந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close