1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது செர்பியா 

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 10:24 pm
fifa-world-cup-2018-serbia-beat-costa-rica-1-0

இன்று நடந்த உலகக் கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் முதலில் ஈ பிரிவில் உள்ள கோஸ்டாரிக்காவும் செர்பியாவும் மோதின. இதில், செர்பியா 1-0 என்ற கணக்கில் கோஸ்டாரிக்காவை வீழ்த்தியது. 

ரஷ்யாவில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று கோஸ்டாரிக்காவை செர்பியா எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கக் கடும் முயற்சி செய்தன. ஆனால், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதன்பிறகு, இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 56 நிமிடத்தில் செர்பிய அணியின் கோலாரோவ் ஒரு கோல் அடித்தார். தனக்குக் கிடைத்த கார்னர் வாய்ப்பை செர்பியா மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதால் கோல் அடிக்க முடிந்தது. இதனால், செர்பியா அணி முன்னிலை பெற்றது. 

இதைத் தொடர்ந்து கோஸ்டாரிக்கா அணி கோல் அடிக்கக் கடுமையாக முயற்சித்தது. ஆனால், செர்பியா அணி தடுப்பாட்டம் மேற்கொண்டு கோஸ்டாரிக்காவின் முயற்சிகளை முறியடித்தனர். அதேநேரத்தில் செர்பியாவாலும் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், 1-0 என்ற கணக்கில் செர்பியா வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் செர்பிய அணிக்கு நான்கு முறையும், கோஸ்டாரிக்காவுக்கு ஐந்து முறையும் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. இதில், செர்பியா மட்டும் ஒரு கோல் அடித்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close