அழுத சிறுவனை கட்டியணைத்துக்கொள்ளும் ரொனல்டோ

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 10:34 am
ronaldo-stops-teambus-and-hugs-young-fan

தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அழுத சிறுவனுடன் பஸ்ஸில் இருந்து இறங்கி வந்து ரொனால்டோ போட்டோ எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தாண்டு கால்பந்து உலக கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்ற வருகின்றன. இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணி விளையாடிய முதல் அட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. அந்த அணிக்காக மூன்று கோலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சார்ந்தது. தனது கால்பந்து வரலாற்றில் இதன்மூலம் 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.

கடந்த வாரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி வீரர்களுடன் பஸ் மூலம் விமான நிலையத்திற்கு செல்ல அணி பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பஸ் அருகில் நின்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகனான சிறுவன் ஒருவன், ரொனால்டோ அருகில் சென்று போட்டோ எடுக்க முயற்சிக்க காவலர்கள் தடுத்துள்ளனர். இதனை பஸ்ஸில் இருந்து பார்த்த ரொனால்டோ, கீழே இறங்கி வந்து அந்த சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் அந்த சிறவனம் அணிந்திருந்த 7ம் நம்பர் டி-ஷர்டில் ஆட்டோகிராஃப் போட்டார். 

ரொனால்டோவின் இந்த செயல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் இந்தவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close