ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணிக்கு அனுமதி

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 11:33 am
indian-men-s-football-team-gets-official-clearance-to-play-in-asian-games

ஆசிய போட்டியில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி கலந்து கொள்வதற்கான அனுமதியை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அளித்துள்ளது. 

தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின், அரசாங்கத்திடம் முறையீடு செய்ததை அடுத்து, இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. 

ஆல்-இந்தியா கால்பந்து சம்மேளனத்துக்கு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அணிக்கு இன்னும் பச்சை கொடி காட்டப்படவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. 

கடந்த மாதம் நடைபெற்ற இன்டெர்காண்டினெண்டல் கோப்பை போட்டியின் போது கான்ஸ்டான்டின் அரசாங்கத்திடம் முறையிட்டிருந்தார். அதில், "எங்களுக்கு அதிகப்படியான போட்டிகள் தேவைப்படுகிறது. அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டால், எங்களை ஆசிய விளையாட்டுகளுக்கு அனுப்புங்கள். இது யு-23 போட்டியாகும். எங்கள் அணியில் இருக்கும் 11 பேரும் 23 வயதுக்கு கீழ் உட்பட்டவர்கள். ஆசிய போட்டியில் விளையாடி அதில் கிடைக்கும் நன்மைகள் வீரர்களுக்கு மிகப்பெரியது" என்று தெரிவித்தார்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close