உலகக் கோப்பை: பனாமாவை பந்தாடியது சூப்பர்ஸ்டார் பெல்ஜியம்!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 01:39 am
belgium-thumps-panama-3-0

மத்திய அமெரிக்க நாடான பனாமாவை, நட்சத்திர வீரர்கள் நிறைந்த பெல்ஜியம் 3-0 என வீழ்த்தி அசத்தியது.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த போட்டியில் முதல்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கும் பனாமாவுடன், பெல்ஜியம் மோதியது. ஈடன் ஹசார்டு, லுகாக்கு, டி ப்ருயின் போன்ற டாப் இளம் வீரர்களை மையமாக கொண்ட பெல்ஜியம், இந்த உலகக் கோப்பையில் பெரிய அணிகளுக்கு நிகராக விளையடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

எதிர்பார்த்ததை போலவே முதல் போட்டி முழுக்க கத்துக்குட்டி பனமாவை திணறடித்தது பெல்ஜியம். சிறப்பாக விளையாடினாலும், முதல் பாதியில் பெல்ஜியம் எந்த கோலும் அடிக்கவில்லை.  ஆனால், இரண்டாவது பாதி துவங்கி 2வது நிமிடமே, ட்ரைஸ் மெர்டேன்ஸ் சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். டி பாக்சின் ஓரத்தில் இருந்த அவர், எதிரணியினர் மீது பட்டு எகிறிய பந்தை, வானத்திலேயே வோலி ஷாட் அடித்து கோலுக்குள் தள்ளினார். அதன்பின், 69வது மற்றும் 70வது நிமிடங்களில் டி ப்ருயின் மற்றும் ஹசார்டு உதவியுடன் லுகாக்கு அடுத்தடுத்து கோல்கள் அடிக்க, போட்டி 3-0 என முடிந்தது.

இங்கிலாந்து, துனிசியா, பனாமா ஆகிய அணிகளை கொண்ட குரூப்பில் இந்த வெற்றியின் மூலம் முதலிடத்தில் உள்ளது பெல்ஜியம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close