உலகக் கோப்பை: போலந்தை வீழ்த்தியது செனகல்!

  shriram   | Last Modified : 20 Jun, 2018 05:55 am
senegal-beats-poland-2-1

ஆப்பிரிக்க நாடான செனகல்,  நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போலந்தை 2-1 என வீழ்த்தியது. 

குரூப் அணிகளுக்கு இடையேயான கடைசி முதல் சுற்று போட்டியில், போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின. சர்வதேச தரவரிசை பட்டியலில், போலந்து 8வது இடத்திலும், செனகல் 27வது இடத்திலும் உள்ளன. நட்சத்திர வீரர் லேவன்டவ்ஸ்கி போலந்துக்காகவும், சாடியோ மானே செனகலுக்காகவும் விளையாடுவதால், போட்டியின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. உலகக் கோப்பையில் பெரிய அணிகளை வீழ்த்தி தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ள செனகல், இந்த முறையும் சிறப்பாக விளையாடியது. 

முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆனால், 37வது நிமிடத்தில், செனகல் வீரர் குவேயே அடித்த ஷாட், போலந்தின் கியோனெக் கால்களில் பட்டு ஓன் கோலாக மாறியது. செனகல் 1-0 என முன்னிலை பெற்றது. அதன் பின், இரண்டாவது பாதியில், போலந்து வீரர் க்ராச்சோவியாக் தவறாக கணித்து பந்தை பின்னால் பாஸ் செய்ய, அதை செனகலின் நியாங் அழகாக கட்டுப்படுத்தி கோல் கீப்பரை தாண்டி சென்று கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். போட்டி முடிவை நெருங்க, 86வது நிமிடத்தில், க்ராச்சோவியாக் ஒரு கோல் அடித்தார். ஆனால், இரண்டாவது கோல் அடித்து போட்டியை சமன் செய்ய போலந்தால் கடைசி வரை முடியவில்லை. 

முதல் சுற்றின் முடிவில், குருப் எச்-சில், ஜப்பான் மற்றும் செனகல் வெற்றியோடு முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close