உலகக் கோப்பை: டென்மார்க்கை ஆப் செய்தது ஆஸ்திரேலியா!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 10:08 pm
world-cup-australia-hold-denmark-with-sparkling-performance

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை குரூப் சி போட்டியில், டென்மார்க்கை ஆஸ்திரேலியா 1-1 என டிரா செய்தது. 

தனது முதல் போட்டியில், பலம்வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினாலும், 2-1 என தோற்றது ஆஸ்திரேலியா. இந்நிலையில், டென்மார்க்குடன் இரண்டாவது போட்டியில் மோதியது. அதேநேரம், பெரூவை 1-0 என வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது டென்மார்க். 

ஐரோப்பிய க்ளப்களின் நட்சத்திர வீரர்களை கொண்ட டென்மார்க் அணியை, கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் ஆஸ்திரேலியா சந்தித்தது. போட்டி துவங்கியது முதல் டென்மார்க் நல்ல வாய்ப்புகளை உருவாக்கியது. 6வது நிமிடத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் அடித்து டென்மார்க்குக்கு முன்னிலை கொடுத்தார். பின்னர் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. 

35வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்து டென்மார்க் வீரரின் கையில் பட்டு வெளியேறியது. முதலில் அதை நடுவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால்,  வீடியோ ரெப்ரி சரிபார்த்து சொன்னதை தொடர்ந்து, கையால் பந்தை தடுத்த வீரருக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் கேப்டன் ஜெடினாக் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். ஆஸ்திரேலிய தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் போட்டி 1-1 என முடிந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close