டென்மார்க்கிடம் போராட்டம்; முதலிடத்தில் முடித்தது பிரான்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 10:03 pm
france-finishes-on-top-after-goalless-draw-against-denmark

டென்மார்க் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே, குரூப் சி-யின் டாப் இடத்திற்காக நடந்த இன்றைய போட்டி கோல் இல்லாமல் முடிந்தது. 

இளம் ஸ்டார்களை கொண்ட சூப்பர் பிரான்ஸ் அணி, இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் என பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குரூப் போட்டிகளில், ஆஸ்திரேலியாவையும் பெரூவையும் கடுமையாக போராடி தான் வீழ்த்த முடிந்தது. குவாலிபையர் போட்டிகளில் இருந்த வேகம், உலகக் கோப்பை போட்டிகளில் பிரான்ஸிடம் இல்லை. ஆனால், டென்மார்க் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 

பெரூவை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவுடன் சிறப்பாக விளையாடி டிரா செய்தது. 3வது போட்டியில் பிரான்ஸுடன் மோதும்போது, வெற்றி பெற்றால், குரூப்பின் முதல் இடத்தில் முடிக்கும் வாய்ப்பு டென்மார்க்குக்கு இருந்தது. 

ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டாலும், முதல் இடத்தை பிடிப்பதற்காக இன்று நடந்த இந்த போட்டியில், இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கின. துவக்கத்தில் இருந்து சிறப்பாக அட்டாக் செய்து விளையாடியது பிரான்ஸ். ஆனால், டென்மார்க் தளராமல் பதிலுக்கு அட்டாக் செய்தது. இரு அணிகளும் பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கின. ஆனால், கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இந்த போட்டி டிரா ஆனதால், பிரான்ஸ் 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டென்மார்க் 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. 

பெரூ மற்றும் ஆஸ்திரேலியா மோதிய மற்றொரு குரூப் சி போட்டியில் பெரூ 2-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி விட்டதால், பெரூ 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 4வது இடத்திலும் உள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close