ரசிகர் கொடுத்த அதிர்ஷ்டத்தால் கோல் அடித்த மெஸ்ஸி!

  shriram   | Last Modified : 27 Jun, 2018 05:25 pm
messi-wears-fan-s-lucky-amulet-in-world-cup-match

தொடர்ந்து சொதப்பலாக விளையாடிக் கொண்டிருந்த அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அதிர்ஷ்டத்துக்காக ரசிகர் கொடுத்த ஒரு சின்னத்தை நேற்றைய போட்டியின்போது, தனது காலிலேயே கட்டிக் கொண்டு விளையாடியது தெரிய வந்துள்ளது.  

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறவிருந்த அர்ஜென்டினா அணி, நேற்று நைஜீரியாவுடன் நடைபெற்ற போட்டியில் கடைசி கட்டத்தில் கோல் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பலாக விளையாடிய அர்ஜென்டினா வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தது. 

3வது போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தாவிட்டால், உலகக் கோப்பையில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது அர்ஜென்டினா. இரண்டு போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத மெஸ்ஸி, இந்த போட்டியில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எதிர்பார்த்தது போல, போட்டி துவங்கி 14வது நிமிடத்தில் மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இரண்டாவது பாதியில் அர்ஜென்டினாவின் டிபென்ஸ் வீரர் செய்த தவறால், பெனால்டி மூலம் டிரா செய்தது நைஜீரியா. அதன்பின், 86வது நிமிடத்தில், ரோஹா அடித்த கோல் மூலம் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 

போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடினர். மெஸ்ஸியை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள், பல கேள்விகளை கேட்டனர். அப்போது அர்ஜென்டினாவின் தீவிர ரசிகரான அந்நாட்டின் நிருபர், "கடந்த போட்டியின் போது, என் அம்மா செய்த ஒரு அதிர்ஷ்ட சின்னத்தை உங்களிடம் கொடுத்தேன் நியாபகம் இருக்கிறதா? அது உங்களிடம் உள்ளதா, இல்லை தூக்கி எறிந்துவிட்டீர்களா?" என கேட்டார். அதற்கு மெஸ்ஸி சிரித்துக் கொண்டே, தனது ஷூவை லேசாக விலக்கிக் காட்டினார். அந்த நிருபர் கொடுத்த சின்னத்தை, புகழ்பெற்ற தனது இடது காலில் கட்டி வைத்திருந்தார் மெஸ்ஸி. இதை பார்த்து நம்பமுடியாத அந்த நிருபர், "இந்த காலில் தான் கோல் அடித்தீர்களா" என கேட்டார். அதற்கு மெஸ்ஸி சிரித்துக் கொண்டே "இல்லை" என்று கூறி விடைபெற்றுச் சென்றார். நடந்தவற்றை நம்பமுடியாத அந்த நிருபர், கேமராவை நோக்கி, "அம்மா, நீ கொடுத்ததை மெஸ்ஸி அணிந்திருக்கிறார்" என கண்ணீருடன் கூறினார். 

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கீழே க்ளிக் செய்து நீங்களும் பாருங்கள்...

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close