ஃபிபா கால்பந்து போட்டி: இன்று முதல் அரையிறுதி போட்டிகள்!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 08:04 pm
fifa-world-cup-semis-from-today

ரஷ்யாவில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்குகின்றன. 

21வது ஃபிபா கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. ரஷ்யாவிகல் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் 32 நாடுகள் பங்கேற்ன. காலிறுதி போட்டிகள் வரை முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்துள்ளன. அரையிறுதி போட்டிகள் இன்று முதல் நடக்கவிருக்கிறது. இதில் முதல் போட்டியில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து உலகில் பலமாக அணியாக கருதப்படும் பிரான்ஸ் அணி 1998ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கோப்பையை தன்வசப்படுத்த களமிறங்க உள்ளது பிரான்ஸ். இந்த அணி காலிறுதி போட்டியில் உருகவே அணியை வீழ்த்தியது. 

பெல்ஜியம் அணியை பொறுத்தவரை அந்த அணி உலகக்கோப்பை வரலாற்றில் 2வது முறையாக அரையிறுதியில் விளையாட இருக்கிறது. இன்றைய போட்டியில் வென்றால் முதல் முறையாக அந்த அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக அந்தஅணி காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் விளையாடும். ஃபிபா தரவரிசை பெல்ஜியம் 3வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் 7வது இடத்தில் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close